சீனாவில் ஏற்பட்டுள்ள கடும் உறைபனியில் 1000 கப்பல்கள் சிக்கி தவிக்கின்றன. 28 ஆண்டுகளுக்கு பிறகு எப்போதும் இல்லாத அளவுக்கு பனிப்பொழிவு நிகழ்கிறது. பொதுவாக அங்கு மைனஸ் 15.3 டிகிரி தட்பவெப்ப நிலை நிலவும். குளிர்காலத்தில் மைனஸ் 3.8 டிகிரியாக இருக்கும்.
இது கடந்த 42 ஆண்டுகளாக நிகழ்ந்து வந்தது. ஆனால் இந்த ஆண்டு அங்கு மைனஸ் 7.4 டிகிரியாக தட்பவெப்ப நிலை குறைந்துவிட்டது. எனவே எங்கும் பனிக்கட்டி மயமாக காட்சி அளிக்கிறது.
இதனால் பஸ் மற்றும் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்துக்கும் மேலாக சீனாவின் சுற்றுலா துறை மிகவும் பாதிப்படைந்துள்ளது.
வடமேற்கு சீனாவில் போகல் கடல் உள்ளது. தற்போது நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக அந்த கடல் நீர் ஐஸ்கட்டியாகி விட்டது. கடல் முழுவதும் சுமார் 27 ஆயிரம் சதுர மீட்டர் அளவுக்கு ஐஸ்ஆக மாறிவிட்டது.
எனவே அக்கடலில் பயணம் மேற்கொண்ட 1000 கப்பல்கள் ஐஸ் கட்டிக்குள் சிக்கி கிடக்கின்றன. தென்கிழக்கு சீனாவில் சிசுவான் மாகாணத்தில் மலை முழுவதும் பனி படர்ந்துள்ளதால் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் அங்கு 1000 பேர் சிக்கி தவிக்கின்றனர். தெற்கு சீனாவில் இரவில் பனிப்புயல் வீசுவதால் கடும் குளிர் நிலவுகிறது. சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
Jan 7, 2013
28 ஆண்டுகளுக்கு பின் சீனாவில் கடும் பனிப் பொழிவு
Posted by AliffAlerts on 00:53 in NF | Comments : 0