எச்ஐவி தொற்றினால் நாட்டில் 2012 ஆம் ஆண்டு 22 பேர் மரணமடைந்துள்ளதுடன் 1597 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். என்று தேசிய பாலியல் நோய் எயிட்ஸ் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
தேசிய பாலியல் நோய் எயிட்ஸ் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள புள்ளிவிபரவியல் தரவுகளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
எச்ஐவி தொற்றினால் இவ்வாண்டு முதல் மூன்று காலாண்டுகளில் 22 பேர் மரணமடைந்துள்ளதுடன் 1597 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இவர்களில் 950 பேர் ஆண்கள், 647 பேர் பெண்களாவர்.
இதேவேளை, 2011ஆம் ஆண்டில் 32 பேர் மரணமடைந்திருந்ததுடன் 1463 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர் அவர்களில் 866 பேர் ஆண்கள், 597 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.