BREAKING NEWS

Dec 1, 2012

2032ல் இலங்கையில் முஸ்லிம்கள் சனத்தொகை 53%???


அன்மைக் காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக நாடளவிய ரீதியில் இனவாதம் என்பது தெளிவாக காட்டப்படுகின்றது என்பதை நாம் வானொலி பத்திரிகை மற்றும் செய்தி இணையத்தங்கள் மற்றும் சமுக வலைத்தளங்கள் மூலமாக அறிந்து கொள்ள முடியும். இதற்கு உதாரணமாக பின்வரும் சம்பவங்களை கூற முடியும்.
ஒரு சில தினங்களுக்கு முன்பு பதுளையில் அமைந்துள்ள முஸ்லிம் கடை ஒன்றில்  புத்தரின் படம் உள்ள கையுறையை விற்றார் என்று அநியாயமாக குற்றஞ் சுமத்தியமை.
சம்பிக்க ரணவக்க ஏழுதிய அல்கைதா அல்ஜிஹாத் எனும் புத்தகம்.
தம்புள்ளை பள்ளிவாயல் சம்பவம்
பதுளையில் பெரும்பான்மையினரால் வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரம்.
அனுராதபுரம் பள்ளிவாயலுக்கு நெருப்பு வைத்தமை போன்ற விடயங்களோடு இன்னும் பல விடயங்களை கூறிக் கொண்டே போக முடியும்.
இவ்வாறு பரப்பட்ட இந்த இனவாதத்தின் ஒரு பகுதியாக இந்த கட்டுரையில் சொல்லப்படப்போகும் விடயமும் அமைந்துள்ளதை என்பதை நடுநிலையாக சிந்திக்கும் அவதானிக்க முடியும்.
கடந்த சில நாட்களாக எமக்கு  ஒரு நீண்ட SMS வந்து கொண்டிருக்கிறது. (படம் பார்க்க..) அது சிங்கள மொழியில் தான் காணப்பட்டது அதன் மூலத்தையும் மொழிபெயர்ப்பையும் இங்கு தருகின்றோம்.
2032 di sinhala  jathiyata wada muslim jathiya 53%k wenawa, ape sinhala rata unta nithiyen aithi wenawa, danma muslim kadawalin badu ganna eka nathara karamu, halal lakunu sahitha badu warjanaya karamu, unta ape idakadanwikunanna epa, ape ganu daruwo thampinta bandinta denna epa.. etsalt wani ayathana walin palli hadanna wishala lesa mudal denawa, fashion bug, nolimit walin redi ganna epa, ape rata niyama sinhala bawddayeknam meka sinhalunta yawanna. hodata hithala  balanna. sulu labayak balala thanpinge kadawalata yanna epa……(SMS ல் உள்ள மூலம்)
•  2032 ஆண்டளவில் முஸ்லிம்கள் சிங்களவர்களை விட அதாவது 53 % ஆக அதிகரிப்பார்கள்.
•   எங்களது சிங்கள நாட்டுக்கு அவர்களது நீதியை (ஷரீஆவை) அமூல்படுத்துவார்கள்.
•  இப்போது முதல் முஸ்லிம் கடைகளில் பொருட்கள் வாங்குவதை நிறுத்துவோம்.
•   Halaal சான்றிதழ் பொறிக்கப்பட்ட பொருட்களை பகிஷ்பரிப்போம்.
•  அவர்களுக்கு எங்களது நிலங்களை விற்க வேண்டாம்.
•   எமது பெண்களை முஸ்லிம்களுக்கு(தம்பின்ட) மணமுடித்துக் கொடுக்க வேண்டாம்.
•  ETISALAT இனால் பெறப்படும் இலாபத்தில் பாரிய அளவு பள்ளி கட்டுவதற்காக வழங்கப்படுகின்றது.
•   பெஷன்பக், நோலிமிட் போன்ற இடங்களில் ஆடைகளை கொள்வனவு செய்ய வேண்டாம்.
•  எமது நாட்டை முட்கூட்டியே பாதுகாப்போம்.
• நீங்கள்  உண்மையான பௌத்தனாக இருந்தால் இதை சிங்கள மக்களுக்கு அனுப்புங்கள்(SMS)
• குறைந்தளவு இலாபத்தை பெறவதற்காக முஸ்லிம்களின் கடைகளுக்கு பொருட்கள் கொள்வனவு செய்ய செல்ல வேண்டாம்.
இது கடந்த செம்டம்பர் மாதம் பதுளையில் பெரும்பான்மையினர்களால் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரத்தை பிரதிபலிப்பதைப் போல் இருந்தாலும் இனவாதத்தின் மற்றுமொரு பிரவசமாகவே பார்க்கப்பட வேண்டும்.
இது படித்தவர்கள் அதாவது தற்போது பட்டப்படிப்பை தொடரும் இளம் பட்டதாரி மாணவர்கள் மத்தியில் பரப்பப்படுவதனால் எதிர்காலத்தில் துவேசம் நிறைந்த ஒரு தலைமுறை உருவாக வழிவகுக்கும். எனவே சிந்தித்து செயல்படவேண்டிய கட்டாயத்தில் முஸ்லிம்களாகிய நாம் இப்போது இருந்து கொண்டிருக்கின்றோம்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &