ஈரானிய கடற்படையினரால் அமெரிக்காவின் ஆளில்லா விமானமொன்று கைப்பற்றப் பட்டுள்ளது.பெர்சியன் வளைகுடா பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றதாக ஈரானியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உளவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இவ்விமானத்தை தாம் கைப்பற்றியதாகவும் குறித்த விமானத்தின் சிறகுகள் சுமார் 3 மீட்டர்கள் வரை நீளமானது எனவும் ஈரானிய புரட்சிப் படையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.எனினும் மேலதிக விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.