பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவையும் மற்றும் மக்கள் விடுதலை முன்னணி தலைமைத்துவத்தையும் சந்தித்து முஸ்லிம்களின் சமகால பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடிய ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சிலும் அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா சபையும் எதிர்வரும் 7 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பில் கூடி எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராயவுள்ளது.
முஸ்லிம்களின் சம கால பிரச்சினைகளையும் சவால்களையும் எதிர்கொள்வது தொடர்பாக சில திட்டங்களை முஸ்லிம் கவுன்சில் முஸ்லிம் அரசியல் தலைமைத்துவத்திடம் சமர்ப்பித்திருந்தது.அத்திட்டங்கள் தொடர்பான நகர்வுகள் பற்றி அன்றைய தினம் ஆராயப்படும் என முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் என்.எம்.அமீன் தெரிவித்தார்.