சவூதி அரேபியாவின் கிழக்குப் பிரதேசமான தமாம் நகரில் சவூதிக்கான இலங்கையின் துணைத்தூதரகம் ஒன்று விரைவில் திறக்கப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.இலங்கையர்கள் அதிகமாக கிழக்குப் பிராந்தியத்தில் பணி புரிவதனாலே அங்கு துணைத் தூதரகம் ஒன்றினை நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
தற்போது 75000 பேர் வரை சவூதியின் கிழக்கு பிராந்தியத்தில் பணி புரிந்து வரும் நிலையில்
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சேமலாப அமைச்சர் டிலான் பெரேரா ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைக்கமையவே தமாம் நகரில்இலங்கையின் துணைத்தூதரகத்தை நிறுவ அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
இலங்கை பணியாளர்களுக்கு கைத்தொழில்சார்ந்த மற்றும் சுகாதாரத்துறையில் சிறந்த வேலைவாய்ப்பை சவூதி அரேபியாவில் பெற்றுக்கொடுப்பதை உறுதி செய்யவும் அவர்களது நலன்களைக் கவனிக்கவும் தமாமில் நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ள துணைத்தூதரகம் பெரிதும் உதவும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.