BREAKING NEWS

Dec 17, 2012

உங்களின் உதவியை நாடும் சகோதரன்

மாவனல்ல ஹெம்மாத்தகம இல: 20 ஹிஜ்ராகம பிரதேசத்தில் வசிக்கும் சகோதரன் M.Z.M. நபீல், வயது 18, கடந்த மூன்றரை வருடகாலமாக இரு கால்களும் செயலிழந்து தனது இளமைப் பருவத்தை வீட்டினுள் கழிக்கும் ஒரு திறமை மிகுந்த சகோதரன்.

இவரது தந்தை முஹம்மத் ஸகரியா சாதாரண கூலித்தொழிலாளி, தாய் பாத்திமா நஜீதா இல்லத்தரசி, சகோதரன் முஹம்மத் ஸகி (22 வயது), தங்கை பாத்திமா அகீலா இம்முறை க.பொ.த. சாதராண தர பரீட்சை எழுதி வருகிறார்.

குடும்பத்தின் வறுமையினாலும், அறியாமையினாலும் குழந்தை பருவத்தில் வழங்கப்படும் நோய்த் தடுப்பு மருந்துகள் சரியான முறையில் வழங்கப்படாமையினால், கிருமித் தொற்று ஒன்றின் காரணமாக கடந்த மூன்றரை வருடங்களுக்கு முன்னர் இந்த சகோதரரின் இரு கால்களும் செயலிழக்க ஆரம்பித்தது. இதன் விபரீதம் அறியாத பெற்றோர் இரண்டு வருடங்களின் பின்னரே வைத்தியசாலையில் அனுமதித்தனர். இதன் பொழுது இந்த சகோதரரின் இரு கால்களும் முற்றாக செயலிழந்து இருந்தது. இவரை பரிசோதித்த வைத்தியர்கள் இவரின் கால்களை மீண்டும் சரி செய்ய முடியாது என கூறினார்கள்.

இதன் பின்னர் வைத்தியசாலை வைத்தியர்களின் ஆலோசனைக்கு இணங்க இவர் ராகம புனருத்தாபன வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டார். அங்கு இவருக்கு கால்களுக்கான உடட்பயிட்சிகள் வழங்கப்பட்டது, அப்பயிற்சிகளும் பலனளிக்கவில்லை. இதனைத்தொடர்ந்து ராகம புனருத்தாபன வைத்தியசாலையில் இவரின் எதிர்காலத்தை முன்னிட்டு கணனி பயிற்சிகள் வழங்கப்பட்டது. கடந்த ஒரு வருடகாலமாக இவர் ராகம புனருத்தாபன வைத்தியசாலையில் கணனி பயிற்சி பெற்றுவரும் இவரின் பயிற்சிக்காலம் இன்னும் ஓரிரு தினங்களில் நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கணனி பயிற்சியை முடித்துவிட்டு இன்னும் ஓரிரு தினங்களில் வீட்டுக்கு வரவிருக்கும் தனது மகனுக்கு பலகையால் கழிவறையுடன் கூடிய கதிரை ஒன்றை செய்து வைத்திருக்கிறார் தந்தை.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &