
எனினும் இடி மின்னல் தாக்கங்கள் இன்றி அமைதியான முறையில் பெய்கின்றமை விசேட அம்சமாகும்.
8ஆம் கட்டை பண்டாரகளை யாக்கடுவை மற்றும் இன்னும் பல தாழ்வான இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன, வீடுகளும் நீரில் மூழ்கியுள்ளன அத்துடன் யாக்கடுவ பாலத்துக்கு மேலாக நீர் பாய்ந்தோடுவதை காணக்கூடியதாகவுள்ளது
மேலும் தேதுரூ ஓயாவில் நீர் மட்டம் அதிகரித்துள்ளதுடன் குருநாகல் தம்புள்ள வீதிக்கு மேலாக நீர் சென்றுகொண்டிருப்பதால் குருநாகல் தம்புள்ள வீதி மூடப்பட்டுளதுடன் கொகரல்ல நகரில் மரமொன்று வீழ்ந்ததில் மின் கம்பங்கள் உடைந்துள்ளதுடன் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது
நீண்ட காலத்துக்குப் பிறகு கண்டி புத்தளம் பிரதான வீதிக்கு குறுக்காக ஓடுகின்றமை குறிப்பிடத்தக்கது. பரகஹதெனிய பெரிய பள்ளிவாயலுக்கு அண்மையில் இவ்வாறு தண்ணீர் பாதையை குறுக்கிடுகின்றது