நாடாளுமன்றத்தில் தவிசாளர் குழாமிலிருந்து ஆளும் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான ஏ.எச்.எம்.அஸ்வர் நீக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இருந்து அவைக்கு தலைமை தாங்கும் போது பக்கசார்பாக நடந்துகொள்கின்றார் என எதிர்க்கட்சியினர் செய்த முறைப்பாட்டினை அடுத்தே அந்த குழாமிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்வரை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
அவைக்கு சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதி தலைவர் தலைமை தாங்காத பட்சத்தில் தவிசாளர் குழாமிலுள்ள ஒருவர் அவைக்கு தலைமை தாங்குவார். அந்த குழு உறுப்பினர்களை தனது விருப்பத்தின் பேரில் நியமிப்பதுடன் நீக்குவதற்கான அதிகாரமும் சபாநாயகருக்கு உள்ளது.
இதனடிப்படையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்வரை அக்குழுவிலிருந்து நீக்குவதற்கு சபாநாயகர் தீர்மானித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
Dec 5, 2012
சபாநாயகரின் அதிரடி - அதிர்ச்சியில் ஏ. எச். எம். அஸ்வர்
Posted by AliffAlerts on 18:09 in செய்தி உள்ளூர் | Comments : 0