6 கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கம் சுகயீன விடுமுறை போராட்டத்தில் இன்று (04) குதித்துள்ளது.
இந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு அளித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
எனினும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு தொழிற்சங்க போராட்டம் மேற்கொள்கின்றமை அநீதியானது என இலங்கை சுதந்திர ஆசிரியர் சங்கத்தின் தலைவர் வசந்தா ஹதபான்கொட தெரிவித்தார்.
இதேவேளை, தொழிற்சங்க நடவடிக்கையை சீர்குலைக்க அரசாங்கம் பல பொய் பிரச்சாரங்களை செய்து வருவதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
எனினும் அரசாங்கத்தை சிக்கலில் தள்ளுவதற்காக சில அரசியல்வாதிகள் பின்னணியில் இருந்து இந்த தொழிற்சங்க நடவடிக்கையை ஊக்குவிப்பதாக இலங்கை சுதந்திர ஆசிரியர் சங்கத்தின் தலைவர் வசந்தா ஹதபான்கொட குறிப்பிட்டுள்ளார்.
Dec 4, 2012
ஆசிரியர், அதிபர்களுக்கு இன்று சுகயீனம்
Posted by AliffAlerts on 09:05 in செய்தி உள்ளூர் | Comments : 0