இந்திய தலைநகர் புதுடில்லியில் ஓடும் பஸ்சில் பாலியல் பாலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவி உயிரிழந்துள்ளார். 23 வயதான இந்த மாணவிக்கு டெல்லியில் மூன்று தடவைகள் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைகளுக்காக சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த நிலையில் சிங்கப்பூரிலுள்ள மௌண்ட் எலிசபெத் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவி சிகிச்சை பலன் இன்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
உடல் மற்றும் மூளைப் பகுதிகளில் கடுமையான காயங்கள் ஏற்பட்டிருந்த நிலையில், அவர் உயிருக்கு போராடி கொண்டிருந்ததாக வைத்தியசாலை வட்டாரம் குறிப்பிடுகின்றது.
கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற இந்த பாலியல் பலாத்கார சம்பவம் இந்தியா முழுவதும் வன்முறைகளுடன் கூடிய ஆர்ப்பாட்டங்களை தோற்றுவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இரண்டு பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மாணவியின் உடலை இந்தியாவிற்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Dec 29, 2012
பாலியல் பலாத்காரத் திற்கு உட்படுத்தப் பட்ட மாணவி உயிரிழந்துள்ளார்
Posted by AliffAlerts on 11:14 in NF | Comments : 0