இந்தோனேஷியாவில் பாரிய பூமியதிர்ச்சி ஒன்று ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவித்துள்ளன.
இந்தோனேசியாவின் சவும்லாகி நகரில், பூமியின் அடியில் 155 கிலோமீற்றர் ஆழத்திலேயே இந்த பூமியதிர்ச்சி 7.2 ரிச்டர் அளவில் ஏற்பட்டுள்ளது.
இந்தோனேசிய நேரத்தின் பிரகாரம் நேற்றிரவு ஏற்பட்ட இந்த பூமியதிர்ச்சியினால், பல பகுதிகளில் கட்டிடங்கள், வீடுகள் குலுங்கின. எனினும் உயிரிழப்பு ஏற்பட்டதாக எந்த தகவலும் இதுவரை இல்லை. அது மட்டுமின்றி சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப் படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.