கல்விப் பொதுத்தராதரப்பத்திர சாதாரண தரப் பரீட்சை இன்று 11ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்ப டவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் டபில்யூ. எம். புஸ்பகுமார தெரிவித்துள்ளார். அத்துடன் பரகஹதெனிய தேசிய பாடசாலையிலிருந்து 140 மாணவர்கள் தோற்றுகின்றனர்
இம்முறை கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் 5 இலட்சத்து 42 ஆயிரத்து 260 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதுடன் அவர்களில் 3 இலட் சத்து 87 ஆயிரத்து 593 பேர் பாடசாலை ரீதியாகவும் ஓரு இலட்சத்து 54 ஆயிரத்து 667 பேர் தனிப்பட்ட ரீதியாகவும் தோற்றவுள்ளனர்.
இதேவேளை குறித்த பரீட்சைக்காக நாடு முழுவதிலும் 4 ஆயிரத்து 48 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டு முழுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளன.
பரீட்சை நிலையங்களாகச் செயற்படும் பாடசாலைகளில் பரீட்சை எழுதும் மாணவர்களைத் தவிர வேறு எவரும் செல்லக் கூடாது எனவும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளதோடு மாணர்கள் சரியான நேரத்திற்குள் சமூகமளிக்க வேணடும் என வேண்டும் கேட்டுக்கொண்டுள்ளார்.