BREAKING NEWS

Nov 20, 2012

ஜம்இய்யதுல் உலமாவின் கனிவான வேண்டுகோள்.


பலஸ்தீன் மக்களுக்கு எதிராக இஸ்ரேல் படையினரால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக பிரார்த்திக்குமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதனால் ஐந்துவேளை தொழுகைகளின் போதும் பிரார்த்திக்குமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் பொதுச் செயலாளர் மௌலவி எம்.எம்.ஏ.முபாரக் அறிவித்துள்ளார். 
இது தொடர்பில் மௌலவி எம்.எம்.ஏ.முபாரக் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"பலஸ்தீனத்தின் அப்பாவி மக்களின் நிலங்களை ஆக்கிரமித்து மேற்கொள்ளப்படுகின்ற இஸ்ரேலின் பயங்கரவாத தாக்குதல்களை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.  இந்த தாக்குதல்களை தடுத்து நிறுத்தி பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட ஐக்கிய நாடுகள் சபை உடனடியாக தலையிட வேண்டும்.
இதற்கு எதிராக மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு இஸ்ரேல் ஓர் அச்சுறுத்தலான நாடு என்பதை மீண்டும் நிரூபித்து விட்டது. இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக பலஸ்தீன் நட்புறவு சங்க தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இது குறித்து அறிக்கை வெளியிட வேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.
எத்தனை தீர்மானங்களை ஐக்கிய நாடுகள் நிறைவேற்றிய போதிலும் அவை பயனற்று போனமையானது மிகவும் வேதனைக்குரியதாகும். பலஸ்தீன் மக்களின் பாதுகாப்பும் சுதந்திரமுமே சர்வதேச அமைத்திக்கும் குறிப்பாக மத்திய கிழக்கின் அமைதிக்கும் வழிவகுக்கும் என்பது சர்வதேசம் ஏற்றுக்கொள்கின்ற விடயமாகும்.
பலஸத்தீன் பூமியை கபளீகரம் செய்து பைத்துல் முகத்தஸை சூழ அகழிகள் வெட்டியது மாத்திரமன்றிஅங்குள்ள முஸ்லிம்கள் கொலை செய்யப்படுவதை கண்டிக்க வேண்டும்.
இது உலகிலுள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் சொந்தமான பூமியாகும். இதற்காக பிரார்த்திப்பதும் அதிக கவனம் செலுத்துவதும் அனைத்து முஸ்லிம்களினதும் கடமையாகும்" என்றார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &