BREAKING NEWS

Nov 20, 2012

ஹலால் சான்றிதழ் இல்லாத பொருட்களை வாங்கவும்:. பொதுபல சேனா


அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினால் வழங்கப்படும் ஹலால் சான்றிதழுக்கு எதிரான பிரசாரம் ஒன்றினை பொதுபல சேனா அமைப்பு முன்னெடுத்து வருகிறது.
இது தொடர்பில் நேற்று கொழும்பில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர், ஹலால் சான்றிதழ் சிங்கள மக்கள் மீது திணிக்கப்படுவதாகவும் ஹலால் குறியீட்டுடன்கூடிய பொருட்களை புறக்கணிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டில் சுமார் நான்காயிரம் ஹலால் சான்றிதழ் பெற்ற பொருட்கள் உள்ளன. இந்த சான்றிதழுக்கு வருடாந்தம் 2 இலட்சம் ரூபா செலுத்தப்படுகிறது. இந்தச் சான்றிதழ் எமக்குத் தேவையில்லை. ஹலால் சான்றிதழ் பொறிக்கப்படாத பொருட்களையே கொள்வனவு செய்யுமாறு சிங்கள மக்களிடம் வேண்டுகோள்விடுகிகிறோம் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
ஹலால் சான்றிதழ் மூலம் பெறப்படும் பணம் இஸ்லாமிய பிரசாரப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இதற்கு சிங்கள மக்கள் பங்காளர்களாக இருக்கக் கூடாது எனவும் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &