கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து குருநாகல் புகையிரத நிலையம் வரை அலுவலக ரயில் ஒன்றை சேவையில் ஈடுபடுத்த ரயில் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
நாளை (23) தொடக்கம் இந்த ரயில் சேவையில் ஈடுபடுத்தப்படும் என ரயில் திணைக்கள போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் எல்.ஏ.என்.ரத்நாயக்க தெரிவித்தார்.
அதன்படி குருநாகல் ரயில் நிலையத்தில் இருந்து காலை 6.25க்கு பயணத்தை ஆரம்பிக்கும் அலுவலக ரயில் காலை 8.38க்கு கோட்டை ரயில் நிலையத்தை வந்தடையும்.
அந்த ரயில் மாலை 4.40க்கு குருநாகல் நோக்கி பயணிக்கவுள்ளதுடன் 6.45க்கு குருநாகல் ரயில் நிலையத்தை சென்றடையும்.
அரச மற்றும் தனியார் நிறுவன சேவையாளர்களுக்கென இந்த அலுவலக ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதென ரயில் திணைக்கள போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் எல்.ஏ.என்.ரத்நாயக்க குறிப்பிட்டார்.
Nov 22, 2012
கொழும்பு - குருநாகல் இடையே புதிய அலுவலக ரயில், சேவையில்
Posted by AliffAlerts on 17:58 in செய்தி உள்ளூர் | Comments : 0