இலங்கையின் வங்கியின் தலைவர் கலாநிதி காமினி விக்ரமசிங்க தனது இராஜினாமா கடிதத்தை சமர்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் வங்கித்துறையில் உயர்ந்த நன்மதிப்பை பெற்றுள்ள இலங்கை வங்கியின் கௌரவம் மற்றும் நன்மையாக விக்ரமசிங்க உன்னதமான சேவையை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
வங்கியின் தலைவர் பதவியில் இருந்து விலக அனுமதி வழங்குமாறு விக்ரமசிங்க நிதியமைச்சிடம் விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் இலங்கை வங்கியின் பதில் தலைவராக ஆர்.சிவராமன் நியமிக்கப்பட்டுள்ளார். வெளிநாடு சென்றுள்ள ஜனாதிபதி நாடு திரும்பியதும் இலங்கை வங்கியின் நிரந்தர தலைவரை நியமிக்கப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.