BREAKING NEWS

Nov 23, 2012

கண்டியில் ஆகாயத்தில் இருந்து விழுந்தது என்ன?

கண்டி அலவத்துகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தீகல பிரதேசத்தின் வீட்டுத் தோட்டம் ஒன்றில் இன்று 2012 11 23 காலை 8.15 அளவில் வானத்திலிருந்து அதிசய பொருள் ஒன்று விழுந்துள்ளது.

சுமார் எட்டு அங்குலம் நீலம் உடைய இது ஒரு பரா ஆயுதத்தின் பகுதியாக இருக்கலாம் என கண்டி விஷேட அதிரடிப்படையினர் நடாத்திய ஆரம்ப கட்ட பரிசோதனைகளின் மூலம் தெரிவிக்கப்பட்டது.

இருந்த போதும் பிரதேசத்தில் இதனை கண்டவர்கள் வாணத்திலிருந்து வந்து பட்டாசு வெடிப்பது போன்ற ஓசையுடன் பூமியில் விழுந்ததாக தெரிவித்தனர்.
இப் பொருள் ஏதேனும் ஒரு ஆயுதத்திலிருந்தே களன்று இருக்க வேண்டும் என்பதே பாதுகாப்பு அதிகாரிகளது கருத்தாக இருந்தது.

இப் பிரதேசத்தில் அல்லது அயல் பிரதேசத்தில் யாராவது இதனை பரீட்சித்துப் பாத்திருக்க முடியும் என்றும் பொலீஸார் சந்தேகிக்கின்றனர். இது சம்பந்தமாக மேலதிக விசாரணைகளை பாதுகாப்பு படையினர் நடாத்தி வருகின்றனர்.





Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &