BREAKING NEWS

Nov 24, 2012

ஹமாஸ் தலைவர் அதிரடி உரை....!!


எங்களுக்கு ஆயுத உதவி செய்த ஈரானுக்கும், நம்பிக்கையாளர் முர்ஸிக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் - ஹமாஸ் தலைவர் அதிரடி உரை..............!!

பாலஸ்தீன சுயாட்சி பகுதியான காஸாவில் இஸ்ரேல் ராணுவத்திற்கும், ஹமாஸுக்கும் இடையேயான போர் நிறுத்த ஒப
்பந்தம் அமுலுக்கு வந்துள்ள சூழலில் காஸாவை ஆளும் ஹமாஸின் பிரதமர் இஸ்மாயில் ஹனியா பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்...

அப்போது இஸ்மாயில் ஹனியா காஸாவின் வெற்றி தெளிவானது, எகிப்தின் குரல் ஓங்கியுள்ளது, அமெரிக்கா புதிய மொழியை கேட்க தொடங்கியுள்ளது என்றும்...

இவ்வெற்றிக்காக எம் மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம், மேலும் எகிப்துக்கும் அதன் நம்பிக்கையாளர் பிரதமர் முர்ஸிக்கும் எமது சிறப்பு நன்றிகள் உரித்தாகட்டும், எமக்கு ஆயுத உதவி செய்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் அதிலும் குறிப்பாக ஈரானுக்கும் எமது நன்றிகளை தெரிவிக்கிறோம் என்றார்,

மேலும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹு தற்போதைய மாறிய அரசியல் சூழலை கணக்கில் எடுக்காதது மிகப் பெரும் பின்னடைவாக இஸ்ரேலுக்கு மாறியது என்ற ஹனியா அதற்கு காரணமாக இஸ்ரேலுக்கு உதவி புரியும் தலைமைகள் மாறி போனதே என்றார், எமது எதிரி போர் நிறுத்த ஒப்பந்தத்தை மதிக்கும் வரை தாமும் மதிப்போம் என்று கூறிய இஸ்மாயில் ஹனியா எதிரி எந்தளவு ஒப்பந்தத்தை மதிக்கிறது என்பதை எகிப்தின் மூலம் தெரிந்து கொள்வோம் என்றும் கூறினார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &