BREAKING NEWS

Nov 24, 2012

இங்கிலாந்து பாராளுமன்றத்தில் ஹிஜாப் அணிந்து உரையாற்றிய மாணவி

இங்கிலாந்தில் இளைஞர்கள் தங்கள் பகுதியில் உள்ள பிரச்சினைகள் மற்றும் மக்களின் கருத்துக்களை பாராளுமன்றத்தில் பிரதிபலிக்கும் வகையில் இளைஞர் பாராளுமன்றம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக 11 வயது முதல் 18 வயது வரையிலான இளைஞர்கள் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்டு, பாராளுமன்றத்தில் பேச வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அவற்றை இங்கிலாந்து எம்.பி.க்கள் கவனித்து நடவடிக்கை எடுப்பார்கள்.

அந்த வகையில், மேற்கு லண்டனில் உள்ள வோக்கிங்காம் பகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சுமையா கரிம் என்ற 16 வயத மாணவி, இங்கிலாந்து இளைஞர் பாராளுமன்றத்தில் உரையாற்றியது அனைவரையும் கவனத்தையும் ஈர்த்தது. காரணம், தலை மற்றும் கழுத்தை மறைக்கும் வகையிலான இஸ்லாமியர்களின் பாரம்பரிய உடையான ஹிஜாப்பை (பர்தா) அவர் அணிந்திருந்ததுதான்.

இதன்மூலம் பிரிட்டன் எம்.பி.க்கள் முன்னிலையில், ஹிஜாப் அணிந்து இளைஞர் பாராளுமன்றத்தில் உரையாற்றிய முதல் நபர் என்ற பெருமையை கரிம் பெற்றிருப்பதாக கருதப்படுகிறது. ஹிஜாப் அணிந்து வந்தது தனது சொந்த தேர்வு என்று கரிம் கூறுகிறார்.





Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &