பிரதம நீதியரசர் சிஷானி பண்டாரநாயக்க மீதான குற்றப் பிரேரணையை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு உயர் நீதிமன்றம் மீண்டும் அழைப்பாணை உத்தரவு விடுத்துள்ளது.
பாராளுமன்ற சபாநாயகர் அவரால் நியமிக்கப்பட்ட தெரிவுக் குழு ஆகியவற்றிற்கு சவால் விடுக்கும் வகையில் உயர் நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது என சபாநாயகர் நேற்றைய தினம் தெளிவாக அறிவித்திருந்தார்.
எனினும் இன்றைய தினம் உயர் நீதிமன்றில் பாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது மீண்டும் அழைப்பாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பிரன் விஜித்த ஹேரத் இன்று பாராளுமன்றில் தெரிவித்தார்.
முன்னதாக இன்று காலை பாராளுமன்றில் உரையாற்றிய பாராளுமன்ற தெரிவுக்குழுவின் உறுப்பினர் ஜோன் அமரதுங்க சபாநாயகருடைய நேற்றைய அறிவித்தலை பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் மூலம் முறையாக உயர் நீதிமன்றுக்கு அறியப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
சபாநாயகர் கட்டளை பிறப்பித்ததன் பின்னரும் தமக்கு நீதிமன்றில் இருந்து அழைப்பாணைகள் வந்த வண்ணம் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை பலஸ்தீனம் தனி நாடாக அங்கிகரிக்கப்பட்டமைக்கு மக்கள் விடுதலை முன்னணி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
பலஸ்தீன தனி நாட்டு கோரிக்கை ஐநா சபையில் வாக்ககெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டமை உலகில் விடுதலை விரும்பும் அனைத்து மக்களுக்கும் கிடைத்த வெற்றி என முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் இன்று பாராளுமன்றில் குறிப்பிட்டார்.
Nov 30, 2012
பாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கு உயர் நீதிமன்றம் மீண்டும் அழைப்பாணை
Posted by AliffAlerts on 21:04 in செய்தி உள்ளூர் | Comments : 0