
நியூசிலாந்து அணியுடன் இடம்பெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சுழலில் அசத்திய ஹேரத், தொடரின் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார். இந்நிலையிலேயே இலங்கை அணித் தலைவர் மஹேல ஜெயவர்தன இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில்,
சுழல் ஜாம்பவான் முரளிதரனுக்கு பின், இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சில் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிக்கிறார் ஹேரத். இவரது துல்லியமான சுழலில், எதிரணி துடுப்பாட்ட வீரர்களுக்கு நெருக்கடி அளித்து விக்கெட் வேட்டையை நடத்துகிறார். வெகுவிரைவில் இவர், உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் வரிசையில் இடம் பிடிப்பார் என்றார்.