பாலியல் தொழிலை இலங்கையில் சட்டபூர்வமமாக்குவது நல்ல விடயமாகும் என சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியும் எழுத்தாளருமான ஏறாவூரைச்சேர்ந்த ஸர்மிளா செய்யித் பி.பி.சி.தமிலோசைக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார். இதேவேளை இவருடைய கருத்துக்கு எதிராக பலர் எதிர்ப்புக்களை தெரிவித்ததையடுத்து அதற்கு விளக்கமளிக்கும் வகையில் தனது முகப்புகத்தகத்தில் கருத்தினையும் வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவதன் மூலம் சுற்றுலாத்துறையை மேம்படுத்த முடியுமென தெண்பகுதி மாகாண சபை உறுப்பினர் அஜித் பிரசன்னா என்பவர் அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்துள்ள நிலையில் இது தொடர்பாக பி.பி.சி.தமிலோசை மேற்படி ஸர்மிளாவை தொர்பு கொண்டு கேட்ட போதே ஸர்மிளா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பாக மேற்படி ஸர்மிளா தொடர்ந்து கூறுகையில் பாலியல் தொழிலை ஊக்குவிப்பதன் மூலம் உல்லாசத்துறையை மேம்படுத்த முடியும்.
உல்லாச துறையை ஊக்குவிப்பதற்காக பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவதென்பது நல்ல விடயமாக நான் பாக்கின்றேன். வேறு சில நாடுகளிலும் இந்த நடைமுறை இருக்கின்றது. பொதுவான அடிப்படையில் பாலியல் தொழிலை சட்ட பூர்வமாக்க அந்த மாகாண சபை கூறியுள்ள காரணங்கள் சரியானவை என நான் பார்க்கின்றேன்.
இலங்கை பாரம்பரிய கலாசார நாடு என்று கூறப்பட்டாலும் கூட இலங்கையில் பாலியல் தொழில் என்பது அதிகரித்து வருகின்றது. சட்ட பூர்வமாக்கமாலே பாலியல் தொழில் அதிகரித்துள்ளது.
பாலியல் தொழிலை சட்ட பூர்வமாக்கவதன் மூலம் அது எந்தவொரு பாதகத்தையும் ஏற்படுத்தாது அது பாதுகாப்பை ஏற்படுத்தும் என்று நான் கருதுகின்றேன். இலங்கையில் சுனாமிக்குப்பின்னரான காலப்பகுதியில் இந்த பாலியல் தொழில் என்பது அதிகரித்து காணப்படுகின்றது.
நாட்டில் தற்போது நடைபெறும் அபிவிருத்தியினால் வெளிநாட்டு பிரஜைகளின் வருகை இவைகளின் மூலமும் இந்த பாலியல் தொழில் என்பது அதிகரித்து வருகின்றது என்று மேற்படி ஸர்மிளா செய்யித் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஸர்மிளா தெரிவித்துள்ள கருத்துக்கு பல்வேறு தரப்பினர் தமது எதிரப்புகளை தெரிவித்துள்ளனர். அந்தவகையில் ஸர்மிளா சமூக வலைத்தளமான தனது முகப்புத்தகத்தில் பின்வருமாறு கருத்து தெரிவித்துள்ளார்.
'பிபிசி செய்திச் சேவையில் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குதல் தொடர்பாக என்னால் தெரிவிக்கப்பட்ட கருத்துக் குறித்து முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் எழுந்துள்ள விமர்சனங்கள்இ கருத்துக்களுக்கான எனது கவலையினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இஸ்லாத்தில் வன்மையாக எச்சரிக்கப்பட்டதும்இ ஹராமாக்கப்பட்டதும் விபச்சாரம் என்பது மறுக்கமுடியாத உண்மை. இஸ்லாமிய பெண்ணாக எந்தவித மாற்றுக்கருத்தும் எனக்கில்லை. சமகால நடைமுறை தொடர்பான எனது கருத்தையே நான் பிபிசிக்கு தெரிவித்திருந்தேன். நான் இஸ்லாமிய சமூகப் பெண்ணாக இருக்கின்ற காரணத்திற்காக சமூக உண்மையை மறைக்க முடியாது என்ற அடிப்படையில் பாலியல் தொழில் இலங்கையில் நடைபெறுகின்றது என்றும்இ அது சட்டபூர்மாக்கப்படும்போது அத்தொழிலில் ஈடுபடுகின்றவர்கள்இ பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் பெறவும் பாதுகாப்புப் பெறவும் வழியை ஏற்படுத்தும் என்பதே என் கருத்து. பாலியல் தொழில் அங்கீகரிப்பட்டது என்றோஇ அதில் யாவரும் ஈடுபடலாம் என்றோ நான் பிரச்சாரம் செய்யவில்லை. முஸ்லிம் சமூகத்தில் தடைசெய்யப்பட்ட விபச்சாரம் பாலியல் தொழில் என்ற அங்கீகாரத்துடன் ஏனைய சமூகத்தில் நடைபெறுவது அப்பட்டமான உண்மை. அந்த உண்மையையும் அதன் பாதிப்பையும்இ சட்டத்தினால் ஏற்படக்கூடிய பாதுகாப்பையும் கவனத்திற் கொண்டுதான் எனது கருத்தை நான் வெளியிட்டிருந்தேன்.
ஒரு பெண்ணாக பாலியல் தொழிலைஇ பெண்கள் போகப்பொருளாக பார்க்கப்படுவதை வன்மையாககக் கண்டிப்பதாகக்கூடக் குறிப்பிட்டிருந்தேன். எனது கருத்து முஸ்லிம் சகோதரர்களை காயப்படுத்துவதாகஇ அல்லது பிழையான முறையில் விளங்கிக் கொள்ளத் தக்கதாக இருந்தால் அல்லாஹ்விடம் பிழை பொறுக்கத் தேடுகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
Nov 21, 2012
பாலியல் தொழிலை சட்டபூர்வ மாக்குவது நல்ல விடயம்: ஸர்மிளா
Posted by AliffAlerts on 11:18 in செய்தி உள்ளூர் | Comments : 0