BREAKING NEWS

Nov 16, 2012

ரூ.500 மில்லியன் பெறுமதியான 'பான்பராக்' கைப்பற்றல்

8 ஆயிரம் கிலோகிராம் நிறையுடைய 'பான்பராக்' எனும் போதைகலந்த பாக்குகள் அடங்கிய 8 கன்டேனர்களை பேலியகொடை பிரதேசத்தில் வைத்து இலங்கை சுங்க திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். 

500 மில்லியன் ரூபா பெறுமதியான மேற்படி போதைப் பாக்குகள், பம்பலப்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ளதாகக் கூறப்படும் போலி நிறுவனமொன்றில் பெயர் குறிப்பிட்டே இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &