BREAKING NEWS

Nov 16, 2012

முஸ்லிம்கள் வெளியேற்றப் பட்டு 22 வருடங்கள்

வட மாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 22 வருடங்கள் நிறைவடைந்துள்ளதை நினைவு கூறும் நிகழ்வொன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் ஏற்பாட்டில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது. 

அமைப்பின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, பிரதம அதிதியாக கலந்த கொண்டு  முக்கிய உரையினையாற்றினார்.

அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, பாட்டலி சம்பிக்க ரணவக்க, ராவய பத்திரிகையின் ஆசிரியர் விக்டர் ஜவன், பேராசிரியர் டாக்டர் ஹஸ்புள்ளா ஆகியோரும் உரைகளை ஆற்றினர்.

இடம்பெயர்வு குறித்து மாணவி நஹ்லா அனீஸ் ஆங்கிலத்தில் காத்திரமான உரையினை இங்கு முன்வைத்தார். இந்நிகழ்வில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆளுநர்கள், மாகாண முதலமைச்சர், உறுப்பினர்கள், பன்னாட்டு துாதுவர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலானவர்களும் கலந்துகொண்டனர்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &