BREAKING NEWS

Nov 16, 2012

கடன் அட்டையைத் திருடி பணமெடுத்த பௌத்த துறவி

பலாங்கொடை பிரதேசத்தில் ஆசிரியை ஒருவரின் கடன்அட்டையைத் திருடி ஏ.ரி.எம். இயந்திரம் மூலம் பணமெடுத்ததாகக் சந்தேகிக்கப்படும் பௌத்த துறவி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி ஆசிரியையின் கடனட்டையைத் திருடி நான்கு சந்தர்ப்பங்களில் பணம் மீள எடுக்கப்பட்டுள்ளமை ஏ.டி.எம். இல் பொருத்தப்பட்டிருந்த கமெரா மூலம் பதிவாகியுள்ளது. இதனை வைத்தே மேற்படி சந்தேக நபர் இனம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரை பொலிஸார் பலாங்கொடை நீதிவான் திருமதி. ஜீ.ஏ.ஆர். ஆட்டிக்கல முன் ஆஜர்செய்தபோது அவரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும் படி உத்தரவிட்டார்.

இது தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &