BREAKING NEWS

Nov 16, 2012

காஸாவில் ரொக்கட் மழை

காஸாவில் கிளர்ச்சியாளர்களும் இஸ்ரேலியர்களும் பரஸ்பரம் ரொக்கட் தாக்குதல்களை மேற்கொண்டிருக்கின்ற நிலையில் எகிப்திய பிரதமர் ஹிஷாம் குவான்டில் காஸாவுக்கான விஜயமொன்றை மேற்கொண்டு இன்று சென்றடைந்தார்.

காஸாவில் நேற்று இரவு பூராகவும் கிளர்ச்சியாளர்களினால் 11 ரொக்கட் தாக்குதல்களும் இஸ்ரேலியர்களினால்; 130 ரொக்கட் தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

காஸாவில 3 மணி நேரம் தங்கவுள்ள  எகிப்திய பிரதமர் யுத்தநிறுத்தத்தை கொண்டுவர முயற்சிக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எகிப்திய பிரதமரின் விஜயத்தின்போது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்களை நிறுத்தினால் தாமும் தாக்குதலை நிறுத்துவதாக  இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதேவேளை 30,000 இராணுவத் தொண்டர் படையினரை சேவைக்கு அழைக்க ஆயத்தமாகியுள்ள இஸ்ரேல், காஸா பிராந்தியத்தின் மீது விமான குண்டுத் தாக்குதலை தீவிரப்படுத்தியது.  இதனால் இஸ்ரேலிய இராணுவத்தினர் காஸாவிற்குள் நுழையக்கூடிய வாய்ப்புக் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காஸா பிராந்தியத்தை கட்டுப்படுத்தும் இஸ்லாமியக் குழுவின் இராணுவத் தளபதி அஹமட் ஜபாரி கடந்த புதன்கிழமை இஸ்ரேலினால் கொல்லப்பட்டதிலிருந்து இந்த மோதல்கள் உக்கிரமடைந்துள்ளன.

இஸ்ரேலின் வான்தாக்குதலில் காஸாவில் 18 பலஸ்தீனியர்களும்  தென் இஸ்ரேல் மீது மேற்கொள்ளப்பட்ட ரொக்கட் தாக்குதலில் இஸ்ரேலியர்கள் மூவரும்  பலியாகியுள்ளதாக அந்த செய்திகளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &