இன்று நாடு எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு? தீர்வு பாராளுமன்றத்தைக் கலைப்பதோ அல்லது பிரதமர் விலகுவதோ இல்லெயன தெரிவித்துள்ள பயங்கரவாதி ஞானசார, அதற்கான ஒரே தீர்வு சிங்களப் புதுவருடக் கொண்டாட்டத்தின் பின் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பதவி விலகுவதுதான் என்கிறார்.
மைத்ரிபாலவின் தலைமையின் கீழ் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உருவாகியுள்ளதாகவும் அதேவேளை அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்துக்கும் ஆபத்து வந்துள்ளதாகவும் ஞானசார மேலும் தெரிவிப்பதும் இதே விடயத்தையே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில போன்றவர்களும் தெரிவித்து வருவதும் இதற்கான அடிப்படை யாழ் நகரில் பாதுகாப்பு தளர்த்தப்படுவதும் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
நாட்டின் ஒரு பக்கத்தை அடக்கி ஆள்வதால் மாத்திரமே தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் எனும் நிலைப்பாட்டில் கடந்த பல காலங்களாக நாட்டு மக்களை அச்சுறுத்தலுக்குள்ளாக்கி வைத்திருந்த ராஜபக்ச ஆட்சியிலிருந்து விடுதலை விரும்பியே மக்கள் மாற்றத்துக்காக வாக்களித்தார்கள் என அண்மையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் அரசியல்வாதிகள் தொடர்பில் ஞானசார ‘உளறும்’ எந்தவொரு விடயத்துக்கும் பதிலளிக்காது அனைவரும் ஞானசாரவைப் புறக்கணித்திருப்பதால் வேறு மார்க்கமின்றி இருக்கும் ஞானசார கடந்த இரு வாரங்களாக ஜனாதிபதியைக் குறிவைத்துப் பேசி வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளமை அவதானிக்கத்தக்கது.