மேல் மாகாண சபை உறுப்பினர் மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியின் உப தலைவராக மத்திய மாகாண சபையின் கண்டி மாவட்ட உறுப்பினர் வேலு குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
உயர்தர கணக்கியல் ஆசிரியராக கண்டியில மிகப்பிரபல்யமான இவர் கடந்த மத்திய மாகாண சபையில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.
மேலும் ஜனநாயக இளைஞர் இணையத்தின் தலைவராக பணியாற்றிய சண். பிரபாகரன், தற்போது அரசியல் குழுவில் உள்வாங்கப்பட்டு கட்சியின் அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த இரண்டு புதிய நியமனங்களையும் கட்சி தலைவர் மனோ கணேசனின் பிரேரணைகளின் படி நேற்று மாலை கொழும்பில் கூடிய அரசியல் குழு ஏகமனதாக வழங்கியது என ஜனநாயக மக்கள் முன்னணியில் உபதலைவராக நேற்று நியமனம் பெற்ற மத்திய மாகாண சபையின் கண்டி மாவட்ட உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார்.