1996 ஆம் ஆண்டு வெளிப்படையான மத்திய குற்றவியல் சட்டத்தின் போர்க்குற்றச்சட்டம் எனும் அமெரிக்கச் சட்டத்தின் கீழ் அமெரிக்க பிரஜைகளை விசாரிக்கமுடியும் என அமெரிக்காவின் ஜஸ்ட் செக்குரிடி எனும் வலைப்பூவின் இணைய ஆசிரியர் ரையான் குட்மன் ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளார். அதன்படி அமெரிக்க பிரஜையான கோதாபய ராஜபக்ஷவையும் விசாரிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்தபோதே பேராசிரியர் ஜயந்த தனபால மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது;
கடந்த வியாழக்கிழமை அமெரிக்காவின் நியூயோர்க்கை தளமாக கொண்டு இயங்கும் ஜஸ்ட் செக்குருடி எனும் வலைப்பூவில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவை அமெரிக்க பிரஜை என்ற அடிப்படையில் அவர் மீது போர்க்குற்ற விசாரணை நடத்துவதற்கு அமெரிக்கச் சட்டங்களில் இடமுண்டு என நிறுவியுள்ளார்.இலங்கையில் நடந்த யுத்தத்தில் கோதாபய ராஜபக்ஷ தொடர்புபட்டுள்ளார் என்பதற்கான ஆதாரங்களை காலக் கிரம வரிசையில் உதாரணத்துடன் தந்துள்ளார். சர்வதேச மனித உரிமை மீறல் சட்டங்களின்படி இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்.
அதேநேரம் அமெரிக்கச்சட்டத்தின்படியும் போர்க்குற்ற விசாரணை நடத்த முடியும் என அமெரிக்க பேராசிரியர் ரையன் குட்மன் விளக்கியுள்ளார். ஜெனீவாவில் நடக்கும் விசாரணை சர்வதேச நீதிக்குட்பட்டது. ரையன் குட்மன் கூறுவது அமெரிக்க சட்டம். அச்சட்டம் அமெரிக்க பிரஜைகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். கோதாபய ராஜபக்ஷ அமெரிக்க குடியுரிமை பெற்ற பிரஜை என்ற வகையில் அமெரிக்க சட்டத்திற்கு அவர் கட்டுப்பட்டவர்.
அதேநேரம் முன்னாள் ஜெனரல் சரத் பொன்சேகா கிரீன்காட் பெற்ற ஒருவரே தவிர, அமெரிக்க பிரஜை அல்ல. எனினும், அவர் அமெரிக்காவுக்கு சென்றால் இந்த சட்டங்களை அவரும் மதிக்க வேண்டி ஏற்படலாம்.