மகரகம நகரிலுள்ள பொது வர்த்தக நிலைய கட்டிடத் தொகுதியில் தீ விபத்தேற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.15 அளவில் இத் தீவிபத்தேற்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரிவ் அலுவலகம் தெரிவித்துள்ளது.
2 மாடிகளைக் கொண்ட இந்த வர்த்தகக் கட்டிடத் தொகுதியிலுள்ள ஒரு வர்த்தக நிலையத்தில் தீ விபத்தேற்பட்டதுடன் அதனைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். இத் தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையும் கண்டறியப்பவில்லையென தெரிவிக்கப்படுகிறது.