இலங்கையின் மிக பிரபல்யமான கண்டி எசல பெரஹர தற்போது கண்டி நகரில் இடம்பெற்று வருகிறது வரும் ஞாயிறு வரை இடம்பெறும் கண்டி எசல பேரஹர இன்று இரவு வீதி உள்ள வரும் போது ரஜ வீதி ரோயல் பார் (Royal Bar) அருகே இரண்டு யானைகள் குழம்பியதால் பெரஹர வில் பங்குபற்றிய நாட்டியகாரர்கள் உற்பட பார்வையிட வந்த சில பொதுமக்களும் காயங்களுக்கு உள்ளானதாக கண்டி நகரில் இருக்கும் செய்தியாளர் குறிப்பிட்டார்.
தற்போது குழம்பிய இரு யானைகளையும் கட்டுப்படுத்தி ரஜ வீதியில் கட்டிப்போட்டுள்ளதாகவும் அவர்மேலும் தெரிவித்தார்.
அதிஷ்டவசமாக உயிராபத்துக்கள் ஏதும் இல்லை எனவும் காயமடைந்தவர்கள் கண்டி வைத்தியசாலைக்கு சிகிற்சைக்காக எம்புலன்ஸ்களில் கொண்டு செல்லப்பட்டதாகவும் கண்டி நகரில் இருக்கும் செய்தியாளர் குறிப்பிட்டார்.