குருநாகல் வைத்தியசாலையில் இரண்டு தலைகளுடன் குழந்தையொன்று பிறந்திருப்பதாக குருநாகல் வைத்தியசாலையின் பணிபுரியூம் ஊழியரொருவர் தெரிவித்தார்.
அத்துடன் குறித்த விடயம் பற்றி குருநாகல் வைத்தியசாலையில் பணிபுரியூம் வைத்தியரொருவரை நாம் தொடர்பு கொண்டபோது இக்குழந்தை இன்று அதிகாலை குருநாகல் வைத்தியசாலையில் விஷேட மகப்பேற்று வைத்திய நிபுணர் புலத்சிங்ஹ அவர்களது வார்டில் சிசேரியன் சத்திர சிகிச்சை மூலம் கிடைக்கப் பெற்றிருப்பதாக அறியக் கிடைத்தது.
ஏற்கனவே ஸ்கேன் மூலமாக குழந்தை இரண்டு தலைகளுடன் இருப்பதை அறிந்திருந்ததாகவூம் குறித்த வைத்தியர் தெரிவித்தார்.
அத்துடன் இக்குழந்தை பெண் குழந்தையென்றும் தெரிவித்தார்.