கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக மக்கள் விடுதலை முன்னணி இன்று முற்பகல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
பாலஸ்தீன் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களுக்கும் அதற்கு அமெரிக்கா துணைபுரிவதற்கும் எதிராக இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்ததாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
அப்பாவி பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் அடுக்கடி தாக்குதல் மேற்கொண்டு பல உயிர்களை காவு கொண்டுள்ளதுடன் மேலும் பலர் காயங்களுக்கு உள்ளாகி உள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தின் போது மக்கள் விடுதலை முன்னனியின் பாராளுமன்ற உறுப்பினர் விஷித ஹேரத் தெரிவித்துள்ளார்.
மேலும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு அமெரிக்க அரசாங்கம் உதவி புரிவதாகவும் இதற்கு உலக நாடுகள் தமது எதிர்பினை தெரிவித்துவரும் நிலையில் இலங்கை அரசாங்கம் எவ்வித கண்டணங்களை யும் வெளியிடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆர்ப்பாட்டம் காரணமாக காலி வீதியின் கொள்ளுப்பிட்டி பகுதியில் இன்று முற்பகல் வாகன நெரிசல் ஏற்பட்டது.