மலிங்க குறித்த நிலைப்பாட்டை அறிவிப்பதற்கான காலக்கேடு விதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, சதன் எக்ஸ்பிரஸ் அணியின் முகாமையாளர் மூலம் இலங்கை கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லே டி சில்வாவிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.
சுப்பர் 4 இருபதுக்கு -20 போட்டியில் உள்ளூர் அணியான சதன் எக்ஸ்பிரஸ் வெற்றிபெற்றது. இவ்வணிக்காக லசித் மலிங்க தலைமை வகித்தார்.
இந்நிலையில் இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் சதன் எக்ஸ்பிரஸ் அணி மும்பை அணியை சந்திக்கவுள்ள நிலையிலேயே மலிங்க மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவதற்கான முடிவை எடுத்துள்ளார்.
லசித்த மலிங்க மும்பை அணிக்காக விளையாட முடிவெடுத்தமைக்கான காரணம் அதிக பணம் சம்பாதிக்கும் நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.