BREAKING NEWS

Aug 6, 2014

ஞானசாரருக்கு எதிராக ராஜித சேனாரத்ன, ராஜிதவுக்கு எதிராக ஞானசார

அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறையிடப் போவதாக பொது பல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.மேலும் தற்போதைய அமைச்சரச்வை பன்றி பண்ணையாக மாறியுள்ளது எனவும் அமைச்சரவையை பொது பல சேனா கேவலமாக வர்ணித்துள்ளது .

நேற்று இடம்பெற்ற ஊடகவியாளர் மாநாட்டிலேயே பொது பல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார் .

அங்கு மேலும்அமைச்சர் ராஜிதவுக்கு எதிராக குற்றசாட்டுகளை முன்வைத்துள்ள அந்த தீவிரவாத அமைப்பின் செயலாளர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடமும் அவர் தொடர்பில் முறையிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

அண்மையில் அளுத்கமையில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு பொது பல சேனாவே காரணம் என்று அமைச்சர் குற்றம் சுமத்தியிருந்தார். என்பதுடன் அளுத்கமயில் பல ஆண்டுகளாக கட்டி வளர்த்த இனநல்லினகக்தை பொது பல சேனா உடைத்து விட்டது அதை மீண்டும் கட்டியமைக்கும் பணியில் தான் மீண்டும் ஈடுபட போவதாகவும் தெரிவிதிருந்தார் இதனையடுத்தே பொது பல சேனா அமைச்சர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறது.

நோர்வே தமது உதவி செய்வதாக அமைச்சர் வெளியிட்ட குற்றச்சாட்டை கலகொட மறுத்துள்ளார் பொறுப்புள்ள அமைச்சர் ஒருவர் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார் தென்னிலங்கையில் உள்ள ஹாஜியாரின் வாகனங்கள் அரசியல்வாதி அமைச்சரின் வாகனத் தொடரணி செல்லும் போதே பயணிக்கிறது. அந்த வாகனத்தில் போதைப்பொருள் கடத்தப்படுகிறது.

அதேவேளை புத்தளத்திலும் கடலட்டை ஏற்றுமதி செய்யும் ஒருவர் அமைச்சரின் நண்பராக இருக்கிறார். அவர் அமைச்சர் வெளிநாடு செல்லும் போது செல்கிறார். குறித்த வர்த்தகரின் சகோதரர் அண்மையில் போதைப்பொருள் பிரச்சினை ஒன்றில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதேவேளை அமைச்சர் ராஜித சேனாரத்ன விடுதலைப் புலிகளுடனும் தொடர்புகளை கொண்டிருந்தார் என்று கலகொட அத்தே ஞானசார தெரிவித்துள்ளார் அத்துடன் அமைச்சர் ராஜிதவை மரியாதை குறைவாகவும் கலகொட அத்தே இந்த செய்தியாளர் சந்திப்பின் போது விமர்சித்துள்ளார் .

அதேவேளைதமது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் பொய்க் குற்றச்சாட்டுக்களை முன் வைத்திருக்கும் பொதுபலசேனாவின் செயலாளர் கங்கொடத்தே ஞானசாரருக்கு எதிராக தாம் சட்ட நடவடிக்கை எடுத்திருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &