மக்களை குழப்பும் வகையில் உண்மைக்கு புறம்பான எஸ்.எம்.எஸ் களை பரப்பிய குற்றச்சாட்டில் குற்றப்புலனாய்வு பிரிவினர் ஐவரை கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக அறிய மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அவர்களை தொடர்பு கொண்டபோது சில இணையதளங்களில் வெளியான செய்தியோன்றினை அடிப்படையாக கொண்டு சிலர் உண்மைக்கு புறம்பான எஸ்.எம்.எஸ் களை பரப்பிய குற்றசாட்டில் விசாரணைகளுக்காக ஐவரை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளது எனவும்,
கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பை சுற்றியுள்ள பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.