BREAKING NEWS

Aug 2, 2014

நாட்டின் தனி முஸ்லிம் கிராமங்கள் இருக்கக் கூடாது : ஞானசாரர்

இலங்கையில் தனி முஸ்லி்ம்  தமிழ் கிராமங்கள் இருக்கக் கூடாது என்பதாக கடும்போக்கு பெளத்த அமைப்பான பொதுபல சேனா பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரர் வலியுறுத்தியுள்ளார். என சில  ஊடங்களில்  தகவல்கள் வெளியாகியுள்ள.
பொதுபல சேனா அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்ட கலந்துரையாடல் ஒன்றின்போது இந்தக் கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.  வாக்கு வங்கியைக் கருத்திற் கொண்டு அரசாங்கம் இலங்கையின் பல பிரதேசங்களிலும் தனி  முஸ்லிம் தமிழ் கிராமங்கள் இருப்பதை கண்டுகொள்வதில்லை ஆனால் இனிவரும் காலங்களில் அவற்றை மாற்ற வேண்டும்.
ஒவ்வொரு கிராமங்களிலும் சிங்கள மக்கள் கலந்து வாழும் நிலை உருவாக்கப்பட வேண்டும் அதற்கேதுவாக எதிர்காலத்தில் தமிழ் முஸ்லிம்  கிராமங்களின் பெயர்களும் மாற்றப்பட் வேண்டும்
சட்டரீதியாகவோ சட்டத்திற்குப் புறம்பான வழியிலோ அனைத்துப் பிரதேசங்களிலும் சிங்கள மக்கள் பரந்து வாழும் நிலை உருவாக்கப்பட வேண்டும். இதற்காக மகாநாயக்க தேரர்களின் வழிகாட்டுதலையும் பெற்றுக் கொள்ள முயற்சிக்கப்படும். அவர்கள் எதிர்த்தாலும் இந்தச் செயற்திட்டம் தடையின்றி முன்னெடுக்கப்படும் என்றும் கலகொட அத்தே ஞானசாரர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
இச் செயற்திட்டத்தை முன்னெடுக்கும் வகையிலான பயிற்சி மற்றும் செயலமர்வுகளை நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கவும் பொதுபல சேனா தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
அதேவேளை தீவிரவாத அமைப்பான பொது பல சேனா நாடுபூராவும் மீண்டும் கூட்டங்களை இந்த மாதம் 10 ஆம் திகதி முதல் நடாத்த ஏற்பாடுகளை செய்து வருவதாக ஏற்கனவே ஊடங்களில் தகவல்கள் வெளியானமை சுட்டிக்காட்டத்தக்கது

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &