BREAKING NEWS

Aug 4, 2014

ஹஜ் கோட்டா வழங்கும் பொறுப்பு இறுதி தீர்ப்பு வெளியானது

புதிய முறையிலான ஹஜ் கோட்டா பட்டியல் புள்ளியடிப்படையில் வழங்கும் பொறுப்பு  பௌத்த மத விவகார அமைச்சின் செயலாளருக்கு வழங்குவதாக  உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது .
இன்று(4) ஆம் திகதி கொழும்பு மூவர் அடங்கிய உயர் நீதிமன்றம்  ஹஜ் கோட்டா சம்பந்தமான இந்த இறுதிப் தீர்ப்பை வழங்கியுள்ளது இதன் பிரகாரம் கோட்டா  வழங்கும் பொறுப்பு  பௌத்த மத விவகார அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளது .
அமைச்சர் பௌசியினால் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட ஹஜ் கோட்டா பட்டியல் நிரகரிக்கப்பட்டுள்ளது புதிய முறையிலான ஹஜ் கோட்டா பட்டியல் புள்ளியடிப்படையில் வழங்குவதற்கு பௌத்த மத விவகார அமைச்சின் செயலாளளாருக்கு பொறுப்பளிக்கப்பட்டு. அவர் தலைமையில் கிரிட்ரீயா முறையில் நாளை ஹோட்டாக்களை பகிர்ந்தளிக்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளது. அதில் கூடிய 85புள்ளியைப் பெறும் முகவர்க்கு ஆகக் கூடியது கோட்டா 51ஆகும். ஆகக்குறைந்த கோட்டா10 ஆகும்.
ஆனால் அமைச்சர் பௌசி குழுவினரால் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட பட்டியலில்  20 முகவர்களுக்கு 80-55வரை ஹஜ் கூடிய கோட்டாக்கள் வழங்கப்பட்டிருந்தன. அவர்கள் அணைவருக்கும்  ஆகக்கூடிய கோட்டா முறைப்படி  51; ஹஜ் கோட்டாவை அவர்கள் பெருவார்கள்.
இன்றைய தீர்ப்பின் படி பாதிக்க்பபட்ட 70 முகவர்களுக்கும் அவர்களது புள்ளி அடிப்படையில் சிறுகச் சிறுக ஹஜ் கோட்டா அதிகரிக்கின்றது. முஸ்லிம்களின் அதி முக்கிய கடமைகளில் ஒன்றான புனித ஹஜ் கடமயை நிறைவேற்ற செல்லும் ஏற்பாடுகளை செய்து கொடுக்கும் முகவர்கள் மத்தியில் பகிர்ந்தளிக்கும் விடயத்தில் பிரதியமைச்சர் காதர் மற்றும் சிரேஷ்ட அமைச்சர் பௌசி ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடுகள் அதை தொடர்ந்து போடப்பட்ட வழக்கு என்பனவற்றின் மீதான தீர்ப்பு மேற்படி வழங்கப்பட்டுள்ளது .

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &