BREAKING NEWS

Aug 7, 2014

இவ்வருட இறுதிக்குள் 2,285 புதிய பஸ் வண்டிகள் : SLTB

பயணிகளுக்கு சிறந்த போக்குவரத்து சேவையை வழங்கும் பொருட்டு இவ்வருட இறுதிக்குள் 2,285  புதிய பஸ் வண்டிகளை சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவிக்கின்றது.

இதன் பொருட்டு கடந்த மாதம் 300 புதிய பஸ் வண்டிகள்  சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் இம்மாதம் மேலும் 500 பஸ் வண்டிகள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிப்பிடத்தகது.

அதேவேளை, 500 பஸ் வண்டிகள் செப்டெம்பரிலும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் 900 பஸ் வண்டிகளும் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் 15 முதல் 20 வருடங்கள் பழைமை வாய்ந்த தற்போது சேவையில் ஈடுபடும் பஸ்களை பயன்படுத்தாதிருக்கவும் பஸ்களின் பராமரிப்பு குறித்த புதிய நடைமுறைகளை அமுல்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாகவும் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &