BREAKING NEWS

Jul 16, 2014

WORLD CUP 2014 BRASIL :கண்டுகளிக்க வந்த ரசிகர்கள் 19 பேர் இஸ்லாத்தை ஏற்றனர்

Photo: பிரேஸில் : உதைப்பந்தாட்டத்தைக் கண்டுகளிக்க வந்த ரசிகர்களில் 19 பேர் இஸ்லாத்தை ஏற்றனர் #FIFA2014

கடந்த சில வாரங்களாக பிரேஸிலில் நடைபெற்று வந்த உலகக்கிண்ணக் கால்பந்தாட்டத் தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த சில வாரங்களுள் போட்டிகளைக் கண்டுகளிக்க பல நாடுகளிலும் இருந்து வந்த ரசிகர்களில் 19 பேர் இஸ்லாத்தைத் தழுவியுள்ளனர். இது கடந்த செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவாகும். அதற்குப் பின்னரும் பலர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவர்கள் பலதரப்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும், ஸ்பெய்ன், இங்கிலாந்து, பிரேஸில் அணிகளின் மூன்று ரசிகர்களும் இதில் உள்ளடங்குவர் எனவும், பிரேஸிலில் இயங்கும் அரச சார்பற்ற ஒரு இஸ்லாமிய அமைப்பு அறிவித்துள்ளது.
உலகக்கிண்ணத் தொடரை முன்னிட்டு இவ்வமைப்பினால் ‘இஸ்லாத்தை அறிந்துகொள்ளுங்கள்’ என்ற தொனிப் பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு திட்டத்தில், அங்கு போட்டிகளைக் கண்டுகளிக்க வரும் இரசிகர்களுக்கு இஸ்லாம் பற்றி புரியவைக்கப்பட்டது. இவ்வமைப்பு பாதையோரங்களில் பல குழுக்களை அமைத்து இஸ்லாம் பற்றிய விடயங்களை இரசிகர்களுக்கு தெளிவுபடுத்தினர். இவ்வமைப்பின் மூலமே அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இந்த உலகக்கிண்ணத் தொடரை முன்னிட்டு மாத்திம் இந்த அமைப்பினால் 2.8 மில்லியனுக்கும் அதிகமான இஸ்லாம் பற்றிய புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பிரேஸிலின் பல ஊர்களிலும் பாதைகள், பொது இடங்கள் போன்றவற்றில் இவை பகிரப்பட்டுள்ளன.
பிரேஸில் : உதைப்பந்தாட்டத்தைக் கண்டுகளிக்க வந்த ரசிகர்களில் 19 பேர் இஸ்லாத்தை ஏற்றனர் #FIFA2014

கடந்த சில வாரங்களாக பிரேஸிலில் நடைபெற்று வந்த உலகக்கிண்ணக் கால்பந்தாட்டத் தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த சில வாரங்களுள் போட்டிகளைக் கண்டுகளிக்க பல நாடுகளிலும் இருந்து வந்த ரசிகர்களில் 19 பேர் இஸ்லாத்தைத் தழுவியுள்ளனர். 

இது கடந்த செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவாகும். அதற்குப் பின்னரும் பலர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவர்கள் பலதரப்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும், ஸ்பெய்ன், இங்கிலாந்து, பிரேஸில் அணிகளின் மூன்று ரசிகர்களும் இதில் உள்ளடங்குவர் எனவும், பிரேஸிலில் இயங்கும் அரச சார்பற்ற ஒரு இஸ்லாமிய அமைப்பு அறிவித்துள்ளது.

உலகக்கிண்ணத் தொடரை முன்னிட்டு இவ்வமைப்பினால் ‘இஸ்லாத்தை அறிந்துகொள்ளுங்கள்’ என்ற தொனிப் பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு திட்டத்தில், அங்கு போட்டிகளைக் கண்டுகளிக்க வரும் இரசிகர்களுக்கு இஸ்லாம் பற்றி புரியவைக்கப்பட்டது. இவ்வமைப்பு பாதையோரங்களில் பல குழுக்களை அமைத்து இஸ்லாம் பற்றிய விடயங்களை இரசிகர்களுக்கு தெளிவுபடுத்தினர். 


இவ்வமைப்பின் மூலமே அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இந்த உலகக்கிண்ணத் தொடரை முன்னிட்டு மாத்திம் இந்த அமைப்பினால் 2.8 மில்லியனுக்கும் அதிகமான இஸ்லாம் பற்றிய புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பிரேஸிலின் பல ஊர்களிலும் பாதைகள், பொது இடங்கள் போன்றவற்றில் இவை பகிரப்பட்டுள்ளன.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &