BREAKING NEWS

Jul 22, 2014

அளுத்கம , தர்கா நகர்: அரசாங்கம் நஷ்ட ஈடு வழங்காது- JVP

பேருவளை தர்கா நகரில் 2006 ஆம் ஆண்டு ஏற்பட்ட மோதலின் போது அழிந்து போன சொத்துக்களுக்காக இழப்பீடு வழங்கப்படாத நிலையில் அண்மையில் ஏற்பட்ட சொத்து சேதங்களுக்கு இழப்பீட்டை அரசாங்கம் வழங்கப் போவதில்லை என JVPயின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
2006 ஆம் ஏற்பட்ட இழப்புகளுக்காக 20 மில்லியன் நஷ்டஈட்டை வழங்க அமைச்சரவையிலும் அனுமதி கிடைத்திருந்தது. எனினும் இந்த நஷ்டஈடு இன்னும் வழங்கப்படவில்லை. இழப்பீட்டை வழங்க அரசாங்கம் நிதி இல்லை என்று கூறியது.
இவ்வாறான நிலையில் அண்மையில் ஏற்பட்ட வன்முறைகளில் ஏற்பட்ட இழப்புகளுக்கு அரசாங்கம் எந்த வகையிலும் நஷ்டஈட்டை வழங்காது என்றும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &