இன்று காலை சாஹிரா தேசிய பாடசாலையில் இடம் பெற்ற பெருநாள் தொழுகையும் அதனை தொடர்ந்து இடம்பெற்ற காஸாவுக்காக புத்தளம் மக்கள் ஆதரவைத் தெரிவிக்கும் விசேட நிகழ்வுகவுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் ஆயிரக் கணக்கானோர் கலந்துகொண்டதுடன், காசா மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் இஸ்ரேலிய சியோனிச ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் நிறைவேற்றப்பட்ட புத்தளம் மக்களின் பிரகடனம் தக்பீர் முழக்கத்துடன் பிரகடனப்படுத்தப்பட்டது.
இப்பிரகடனத்தில், புத்தளம் மக்கள் சார்பாக நகரசபை தலைவர் அல் ஹாஜ் கே ஏ பாயிஸ், புத்தளம் பெரிய பள்ளிவாசல் தலைவர் அல் ஹாஜ் முசம்மில், புத்தளம் மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம், வடமேல் மாகான சபை உறுப்பினர்களான அல் ஹாஜ் தாஹிர் மற்றும் ஏ.எச்.எம் நியாஸ் ஆகியோர் கையொப்பமிட்டனர்.
Photos : Puttalamonline.com
Photos : Puttalamonline.com