இலங்கை அணியின் அதிரடி வீரர் திசர பெரேரா இலங்கை தேசிய கிரிக்கட் அணியில் இருந்து ஓய்வுபெற ஆயத்தமாகி வருவதாக இலங்கை கிரிக்கட் நிறுவன செய்திகள் தெரிவிக்கின்றன.
சிறீ லங்கா கிரிக்கட் நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இத்தீர்மானத்துக்கு திசர பெரேரா வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிரடி வீரர் திசர பெரெராவை இலங்கை தேசிய அணியில் இருந்து நீக்கி இலங்கை ஏ அணியில் சேர்த்தமை தொடர்ப்பில் மன அழுத்தத்துக்கு உள்ளாகி மன அழுத்தத்தில் இருந்து மீண்டுவர மருத்துவ சிகிற்சை பெற்றுவருவதாக நம்பத்தகுந்த வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.
முன்னதாக மேற்கிந்திய தீவின் கெரிபியன் பிர்மியர் லீக் போட்டிகளுக்கு செல்ல இலங்கை கிரிக்கட் நிறுவனத்தில் அனுமதி மறுக்கப்பட்டதாகவும் அதனை தொடர்ந்து திசரபெரேரா மற்றும் இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் உறவில் விரிசல் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும் திசர பெரேரா கிரிக்கட்போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் பட்சத்தில் நியூசிலாந்தில் வசிக்க திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.