BREAKING NEWS

Jul 20, 2014

ஹக்கீம் அரசை விட்டு வெளியேறலாம் – ஜனாதிபதி

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அமைச்சர் நவீன் திசாநாயக்க இருவரும் அரசாங்கத்தை விட்டு வெளியேறலாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரச தீர்மானங்களுக்கு செவிசாய்க்காமல் காலிழுத்துக் கொண்டு இருப்பவர்களும்,சர்வதேச ரீதியாக அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துபவர்களும், நான் வெளியேற்றுவதற்கு முன்பு அவர்களாகவே வெளியேறுவது நல்லது எனவும் ஜனாதிபதி கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்திருக்கிறார்.

அமைச்சர் நவீன் திசாநாயக்கவின் மாமனாரான கரு ஜெயசூரிய பொது அபேட்சகராகக் களமிறங்குவது தொடர்பில்,தனக்கும் ஐ.தே.கவில் உரிமையிருக்கிறது என்று நவீன் திசாநாயக்க கருத்து வெளியிட்டிருந்தமை ஜனாதிபதியை சினம் கொள்ளச் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &