அனுராதபுரம் அசரிகம பிரதேசத்தில் 39 வயதான முஹம்மத் இஷாக் என்பவர் தீயிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தமது இரு சக்கர வண்டியில் வாகனம் ஒன்றினை கொள்வனவு செய்ய சென்றுள்ள வேளையில் இனந்தெரியாத நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டு அவருடன் இருசக்கர வண்டியும் எரியூட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது காலை 10.30 மணியளவில் குறித்த சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்ததாகவும் மேலதிக விசாரனைகளை அனுராதபுரம் பொலிஸார் ஸ்தலத்துக்கு சென்று மேற்கொண்டுள்ளதாகவும் அனுராதபுரம் பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
SOURCE : MadawalaNews