BREAKING NEWS

Jul 31, 2014

ராணுவத்தினரை உற்சாகப் படுத்தும் ஆடை அவிழ்த்த இஸ்ரேல் பெண்கள்

israel
உலகின் எந்த ஒரு நாட்டு பாதுகாப்பு படையும் எதிர்கொள்ளாத விமர்சனத்தை இஸ்ரேல் ராணுவம் சந்தித்துக்கொண்டுள்ள நிலையில், மற்றொரு பக்கம், வேறு எங்கும் கிடைக்காத கன்னிப்பெண்களின் ஆதரவும் இஸ்ரேல் ராணுவத்துக்கு கிடைத்து வருகிறது. அதுவும், ஆடையை அவிழ்த்துப்போடும் அளவுக்கு ஆதரவு சென்றுள்ளது.

காசா முனையில் மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதாக கூறி அதிபயங்கர ஆயுதங்களுடன் அடுத்தடுத்து தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது. இந்த தாக்குதலில் பலஸ்தீனத்தின் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதாக கூறி உலக நாடுகள் கண்டனம் தெரிவிக்கின்றன.

ஆனால் இஸ்ரேல் மக்களோ, தங்களை தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்றும் தேவதூதர்களாக இஸ்ரேல் பாதுகாப்பு படையை (IDF) பார்க்கிறார்கள். அந்த நாட்டு மக்கள் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தும் இடத்துக்கு சென்று குடும்பத்தோடு ராணுவத்தினரை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இஸ்ரேல் இளம் பெண்கள் பலர் ஒன்றிணைந்து, ‘Standing With IDF’ என்ற பெயரில் பேஸ்புக் பக்கத்தை உருவாக்கியுள்ளனர். இதில் தங்கள் நாட்டு ராணுவத்தினரை ஊக்கப்படுத்தியும், ஹமாஸை திட்டியும் பதிவிட்டு வருகிறார்கள்.

இத்தோடு நிறுத்தவில்லை இஸ்ரேல் பெண்கள். ஆடையை குறைத்துவிட்டு அரை நிர்வாண நிலையில் தங்கள் உடலில் ‘I Love IDF’ என்பது போன்ற வாசகங்களை லிப்ஸ்டிக் உள்ளிட்டவற்றால் எழுதி போட்டோ எடுத்து அதையும் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளனர். இஸ்ரேல் ராணுவத்தினர் இந்த பெண்களின் செயலை பார்த்து ஊக்கம் பெற்று மேலும் தாக்குதலை தீவிரப்படுத்துவார்கள் என்பது அவர்கள் நம்பிக்கை.

கடந்த வியாழக்கிழமை துவக்கப்பட்ட இந்த பேஸ்புக் பக்கத்துக்கு அதற்குள்ளாக பல ஆயிரம் லைக்குகள் விழுந்துள்ளன. பலஸ்தீனத்துக்கும், ஹமாஸூக்கும் எதிரான கருத்துக்களை இஸ்ரேல் ஆதரவாளர்கள் மளமளவென பதிவிட்டு வருகிறார்கள்.

என்னதான் இஸ்ரேலிய இராணுவத்தை இப்பெண்கள் கவர்ந்தாலும், இஸ்ரேல் இராணுவம் ஹமாஸின் தாக்குதலில் இருந்து எப்படித் தப்பிக்கலாம் என்றே அவர்களின் முழுக்கவனமும் இருந்துவருகிறது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &