BREAKING NEWS

Jul 23, 2014

ஹஜ் கோட்டாக்கள் ஹஜ் முகவர்களுக்கு பகிர்ந்தளிப்பு..


 ஹஜ் பற்றிய ஊடகவியலாளர் மாநாடு 
சிரேஸ்ட அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி அவரது அமைச்சில் நேற்று நடைபெற்றது.

இம்முறை சவுதி அரேபியாவின் ஹஜ் பிரிவினால் இலங்கைக்கு வழங்கிய 2240 ஹஜ் கோட்டாக்களே இலங்கைக்கு வழங்கப்பட்டது. அதனை பதிவுசெய்யப்பட்ட 88 ஹஜ் முகவர்களுக்கு அது பகிர்ந்தளிக்கப்பட்டுவிட்டது.
என்னுடன் ஏனைய 4 உறுப்பிணர்களும் சேர்ந்து கிரீட்டிரியா முறைப்படி முகவர்களுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டு கூடிய புள்ளிகள் பெற்றவர்களுக்கு ஆகக் கூடியது 85ம் ஆகக் குறைந்த புள்ளிகளைப் பெற்றவர்களும் கடந்த முறை ஹாஜிகளை ஏமாற்றியவர்கள் கூடுதலாக பணம் பெற்றவர்கள், உரிய தங்குமிடம், ஏணைய வசதிகள் செய்துகொடுக்காத ஹஜ் முகவர்களுக்கு 10, 05 என பகிர்ந்தளிக்கப்பட்டது.
குறைந்த ஹஜ் கோட்டக்களைப் பெற்ற 15 முகவர்களே என்.எம் ரவல்ஸ் தலைமையில் செரண்டிப் ஹஜ் முகவர்கள் எனச் சொல்லிக் கொண்டு ஒவ்வொரு வருடமாக உயர் நீதிமன்றில் வழக்கு தாக்குதல் செய்துள்ளனர். இவர்களுக்கு பாக்கப்போணல் இம்முறை ஒரு ஹஜ் கோட்டாவையேனும் வழங்காது விடப்பட்டிருக்க வேண்டும். சிறுக தொகை கொடுத்தது இவர்கள் திருந்த வேண்டும் என்றுதான் கொடுக்கப்பட்டது. சிலர் இதனை வைத்து பணம் சம்பாதிக்கின்றார்கள்.
உதராணமாக காத்தாண்குடியில் உலமாக்கல் சேர்ந்து ஹஜ் முகவர் ஒன்றை நடாத்துகின்றனர். அவர்கள் கடந்த வருடம் 18 இலட்சம் உழைத்து அதனை அப்பிரதேசத்தின் சமுக நலன்களுக்கும் அப்பிரதேசத்தின் கல்வி நடவடிக்கைகளுக்கும் செலவு செய்கின்றனர்.

அவ்வாறனாவர்களுக்கு தான் அடுத்த முறை கூடுதல் ஹஜ் கோட்டா வழங்க வேண்டும். இவர்கள் பணம் சம்பாதிக்கும் நோக்கில் ஹஜ் முகவர் நடாத்தவில்லை.
கோட்டில் வழக்கு இருந்தாலும் முன்கூட்டியே சவுதி அரசுக்கு உடனடியாக அனுப்பவேண்டி இருந்ததால் அதனை கடந்த வாரமே நாங்கள் அனுப்பிவிட்டேன்.
காதர் ஜ.தே.கட்சியில் இருந்து அரசாங்கத்திற்கு மாறியதன் நோக்கம் ஹஜ்ஜீக்கு பொருப்பாக வருவதற்கென்றேதான் அவரது நோக்கம். அவர் சொல்லுர மாதிதி 50 50 பிரித்துக்கொடுக்க முடியாது. . . ஹஜ் சம்பந்தமாக நடைபெற்ற எந்தக் கூட்டத்திற்கும் அவர் சமுகம் தரவில்லை.

அவருடைய கணடி ஹாரா ஹஜ் முகவர்கள் கூட கடந்த முறை தவறு இழைத்தவர்கள் அவர்களுக்கும் 85 கோட்டா வழங்கப்பட்டுள்ளது. அதே மாதிரி சேப்வே ரவலஸ்சுக்கும் 85 வழங்கப்பட்டுள்ளது.
அடுத்த 3 வருடத்தில் மக்கா புனர்நிர்மாணம் நிறைபெற்றபின் ஹஜ் கோட்டா பிரச்சினை இருக்காது. ஒரு முறை ஹஜ்ஜூக்குப் போணவர்கள் இரண்டாவது முறையாக 5வருடத்திற்குப் பின் போகமுடியும்.

உயர்நீதிமன்றில் கடந்த வாரம் இரண்டாவது முறையாக இடைக்கால தடையுத்தரவு விதிக்கவில்லை. நீதிபதிகள் எண்னை சந்தித்து இப்பிரச்சினையாக சுமுகமாக தீர்த்துக்கொள்ளுங்கள் என்றே ஆலோசனை வழங்கியிருக்கின்றார்கள்.
அரசாங்கம் இதனைப்பொறுப்பெடுத்து செய்வதற்கு தயாராக இருந்தாலும் இதில் வரும் பிரச்சினைகள் அரசில் மேல் வீன் பழி வந்துவிடும் என அரசாங்கம் கூருகின்றது. சில முகவர்கள் நிறைய ஹஜ் மற்றும் உம்ரா விடயத்தில் நிறைய குளருபாடிகள், நிதி மோசடிகள் செய்துள்ளனர். 10 இலக்கத்தை 10 ஆயிரம் எனவும் 1 இலட்சத்தை 10 இலட்சம் என எண்களை திருத்தியமைத்து குளருபடிகள் செய்துள்ளனர்.
ஒரு வைத்தியரை அழைத்துச் சென்றால் அவரது பேக்கைத் தூக்கிக் போகின்றவருக்கும் பேசா விசா வழங்கவேண்டியுள்ளது. ஒரு சிலர் ஹஜ் விசா பெற்று அங்கு இடியப்பம் சுட்டு விற்பதற்கும் வருகின்றனர் எனவும் சிரேஸ்ட அமைச்சர் பௌசி தெரிவித்தார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &