ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹகீம்மை உடனடியாக அமைச்சரவையில் இருந்தும் ,அரசாங்கத்தில் இருந்தும் வெளியேற்றவேண்டும் என பெளத்த தீவிரவாத அமைப்பான பொது பல சேனாவின் செயலாளர் கலபொட அத்தே ஞானசாரர் ஜனாதிபதியை கோரியுள்ளார் .
உடனடியாக அரசாங்கம் செயல்படாவிட்டால் அரசாங்கம் அடுத்த தேர்தலில் சிங்கள பௌதர்க்ளில் ஆதரவை இழக்கும் ,ஹக்கீம் பெளத்த மதத்துக்கு இழிவை ஏற்படுத்துகிறார் . ஹக்கீமை மஹிந்த ராஜபக்ஷ கையாளும் விதம் வெட்கம் நிறைததாகும் , நான் ஜனதிபதியாக இருந்திருந்தால் ஹக்கீமின் காதில் பிடித்து அவரை வெளியே வீசியிருப்பேன் எனவும் அந்த பெளத்த தீவிரவாத இயக்கத்தின் செயலாளர் ஞானசாரர் தெரிவித்துள்ளார் .
அவர் இன்று ஊடகவியலர்களை சந்தித்து தெரிவித்துள்ள தகவல்களிலேயே மேற்படி அவர் தெரிவித்துள்ளார் .
மேலும் அவர் தெரிவித்துள்ள தகவலில் , ஹக்கீம் வெளியிடும் தகவல்கள் மூலமாக பெளத்த பிக்குகள் மீது சேதத்தை ஏற்படுத்துகிறார். முஸ்லிம்கள் மத்தியில் தீவிரவாதத்தை பரப்புகிறார் , ஹக்கீம் ஒரு அரசியல் விபச்சாரகன் ,அளுத்கம சம்பவம் தொடர்பில் வீடுவீடாக சென்று முஸ்லிம்கள் பிழையான தகல்வகளை பரப்பியுள்ளமை தொடர்பில் உண்மை நிலையை தெளிவு படுத்துவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்