பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்சவுக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என தகவல்கள் குறிப்பிடுகின்றன . பாதுகாப்பு அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவின் கீழ் இயங்கும் நகர அபிவிருத்தி அதிகார சபை,இராணுவத்தினரை ஏவி களுத்துறையில் உடைத்தெறிந்த வர்த்தக நிலையங்கள் தொடர்பில் கோதபாயவுக்கு எதிராகவே நேற்று இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
களுத்துறை,புகையிரத நிலைய வீதியில் இருந்த 56 வர்த்தக நிலையங்களே இவ்வாறு உடைத்து எறியப்பட்டுள்ளதகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களோடு மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்களே இம் முறைப்பாட்டைச் செய்திருக்கின்றனர்.